காய்கறி - சவ்சவ் - உடல் கொழுப்பு குறைந்து, சரியான வடிவத்துக்குத் திரும்பும்.

சமைக்க வேண்டாம்... அப்படியே சாப்பிடலாம்’ என்கிற வகையறா காய்கறிகளில் ‘சவ்சவ்’ என்கிற பெங்களூரு கத்தரிக்காயும் ஒன்று. ஆனால், அந்தத் தகவல் பலரும் அறியாதது. சமையலறை மெனுவில் கூட்டு இடம் பெறுகிற நாட்களில், அதிலும் வேறு எந்தக் காயும் சிறப்பாக அமையாத பட்சத்தில்தான் சவ்சவ்வின் பக்கம் பலரது பார்வையும் திரும்பும். அன்றாடம் சேர்த்துக் கொள்ளக்கூடிய அவசியமான காய்களில் சவ்சவ்வும் ஒன்று!